இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்புக்கு நடிகர் பெயர் -என்ன காரணம்?
இமயமலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்பு இனத்துக்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ பெயர் வைக்கப்பட்டுள்ளது.
புதிய வகை பாம்பு
இந்தியாவின் நேபாளம் , சிக்கிம், பூடான், அருணாச்சல பிரதேசம் இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டம் வரை ஆங்கிகுலஸ் டிகாப்ரியோய் (Anguiculus dicaprioi) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய வகை பாம்பினம் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்த வகையான பாம்புகள் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மட்டுமே தென்படுவதாகக் கூறப்படுகிறது. மற்ற நாட்களில் இவற்றைப் பார்ப்பது மிகவும் அரிது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சுமார் கடந்த 20 ஆண்டுகளாக இந்த பாம்புகள் பற்றிய எந்த தகவலும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர்.இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மேற்கு இமயமலைப் பகுதியில் வசித்து வரும் வீரேந்தர் பரத்வாஜ் என்பவர் தனது வீட்டின் கொல்லைப் புறத்தில் ஆங்கிகுலஸ் டிகாப்ரியோய் பாம்பை முதன்முறையாகப் பார்த்துள்ளார்.
ஹாலிவுட் நடிகர்
இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் அந்த பாம்பின் புகைப்படங்களைப் பகிர்ந்தார்.இதனையடுத்து ஆய்வாளர்கள் டிகாப்ரியோய் பாம்பை ஆராய்ச்சி செய்தனர். அப்போது ஆய்வில் இந்த பாம்பின் மரபணு வரிசை ஆசியா முழுவதும் உள்ள எந்த பாம்பு இனத்துடன் பொருந்தவில்லை என்ற அதிர்ச்சி தகவலைத் தெரிவித்தனர்.
‘டைட்டானிக்’, ‘ஷட்டர் ஐலேண்ட்’, ‘இன்செப்ஷன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, சுற்றுச்சூழல் ஆர்வலருமாக இருந்து வருகிறார்.மேலும் இது தொடர்பான ஏராளமான ஆவணப்படங்களையும் அவர் எடுத்துள்ளார்.
இதனைக் கருத்தில் கொண்டே இந்த புதிய பாம்பினத்துக்கு அவருடைய பெயரைச் சூட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.