கிரிக்கெட்டில் யார் பெரிய ஆள்.. தோனியா..கோலியா? ஒப்பனாக சொன்ன சந்திரபாபு!
கிரிக்கெட்டில் பெரிய லீடர் தோனியா, கோலியா என கேள்விக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பதில் அளித்தார்.
சந்திரபாபு
நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமூரி பாலகிருஷ்ணா என்கிற பாலய்யா தொகுத்து வழங்கும் 'Unstoppable with NBK' என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார்.
அதில் அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு, பதில் அளித்தார். அப்போது, நீங்கள் எம்.எஸ்.தோனியை போன்ற ஒரு தலைவர், நான் விராட் கோலியை போன்ற ஒரு வீரர் என்று பாலய்யா கூறினார்.
கிரிக்கெட்டில்..
இதற்கு, எனக்கு எப்போதும் விராட் கோலி தான் பிடிக்கும் என்று சந்திரபாபு நாயுடு பதில் அளித்தார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
இதையடுத்து, விராட் கோலி ஆதரவாளர்கள் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, கமென்ட் செய்து வருகின்றனர்.