சந்திரபாபு முதல்வரானதும் ஜெகன் சேனல் நீக்கம் - ஆபரேட்டர்கள் நடவடிக்கை!
சந்திரபாபு முதல்வரானதும் ஜெகனுக்கு சொந்தமான சேனல் நீக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் ஆட்சி
சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஒஎஸ் ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத்துக்கு சொந்தமான டிவி 9, சாக்சி டிவி, என்டிவி மற்றும் 10 டிவி ஆகிய நான்கு சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
ஆனால், இந்த விவகாரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான டிராய், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர், ஆந்திர மாநில முதல்வர் ஆகியோருக்கு ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ். நிரஞ்ஜன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.
சேனல் நீக்கம்
அதில், புதிதாக ஆட்சியமைத்துள்ள தெலுங்குதேச கட்சி, ஆந்திர பிரதேச கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கத்துக்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்துள்ளது. அதன் வழிகாட்டுதல் பேரில் டிவி9, என்டிவி, 10 டிவி மற்றும் சாக்சி டிவி சேனல்களின் ஒளிபரப்பு முடக்கப்பட்டுள்ளது.
இது, ஜனநாயக கொள்கைகளின் மீதான நேரடித் தாக்குதல். இத்தகைய தலையீடு பத்திரிகை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டிவி சேனல் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஒஎஸ்ஆர் காங்கிரஸின் ஜெகன் தலைமையிலான ஆட்சியின்போதும்,
தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவான டிவி5, ஏபிஎன்ஆந்திரா ஜோதி ஆகிய செய்தி சேனல்கள் கேபிள் டிவி ஒளிபரப்பிலிருந்து நீக்கினர். அதற்கான விலையை அவர்கள் தற்போது கொடுக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.