அடேங்கப்பா..! 9 வயதில் இத்தனை கோடிகளா? தலைசுற்றவைக்கும் சந்திரபாபு நாயுடு பேரனின் சொத்து மதிப்பு
ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறை பதவியேற்றுள்ளார் சந்திரபாபு நாயுடு.
சந்திரபாபு நாயுடு
நடுத்தர குடும்பத்தில் பிறந்த சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆந்திர சினிமாவின் முடிசூடா மன்னன் என்.டி.ஆரின் அறிமுகம் கிடைக்க அவரை திருமணம் செய்து கொண்டார்.
என்.டி.ஆர் முதல்வரான பிறகு, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த அவர், பின்னர் கட்சியின் கட்டுப்பாட்டை பெற்று தற்போது மாநிலத்தின் முதல்வராக 4-வது முறை பதவியேற்றுள்ளார். சந்திரபாபு நாயுடு 1992-ஆம் ஆண்டு heritage foods என்ற நிறுவனத்தை துவங்கினார். இந்நிறுவனம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபல,மான ஒரு dairy product நிறுவனமாக இருக்கின்றது.
பேரன் சொத்து
சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு ஒரே மகன் நாரா லோகேஷ். லோகேஷ் தற்போது மாநிலத்தின் அமைச்சராக 2-வது முறை பதவியேற்றுள்ளார்.
லோகேஷின் மனைவி பிராமணி தான் தற்போது ஹெரிடேஜ் நிறுவனத்தை பராமரித்து வருகிறார். லாபகரமான நிறுவனமாக இருக்கும் ஹெரிடேஜ் நிறுவனத்தில் சந்திரபாபு நாயுடுவின் பேரனும் பங்குதாரராக இருக்கிறார். நிறுவனத்தின் முதன்மை பங்குதாரரான புவனேஷ்வரியின் சொத்து மதிப்பு ரூ.535 கோடியை கடந்துள்ளது.
நிறுவனத்தில், புவனேஸ்வரிக்கு 24.37 சதவீதம், லோகேஷ் 10.82 சதவீதம், பிராமணி 0.46 சதவீதம், அவரது 9 வயது பேரன் தேவன்ஷ் 0.06 சதவீதமும் பங்குகளும் வைத்துள்ளனர். கடந்த ஜூன் 3ஆம் தேதி ரூ.2.4 கோடியாக இருந்த தேவன்ஷின் 56,075 பங்குகளின் மதிப்பு இப்போது ரூ.4.1 கோடியாக உயர்ந்துள்ளது.