ஸ்மிருதி மந்தனா விரலில் மோதிரம் இல்லை - பலஷ் முச்சலுடன் பிரேக் அப்?
ஸ்மிருதி மந்தனா விரலில் நிச்சயதார்த்த மோதிரம் இல்லாதது ரசிகர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது.
ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையாக இருக்கும் ஸ்மிருதி மந்தனாவுக்கும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் திருமணம் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

அதற்கு முன்பாக நடந்த சடங்குகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகின. ஆனால் ருமணத்தின் போது ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், திருமணம் நிறுத்தப்பட்டதாக தெரிய வந்தது.
பிரேக் அப்?
இதன்பின் சிறிது நேரத்தில் பலஷ் முச்சலும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமணம் தொடர்பான அத்தனை பதிவுகளையும் நீக்கினார்.

தொடர்ந்து பலஷ் வேறொரு பெண்ணுடன் உறவில் இருந்ததாக சில பதிவுகள் வெளியாகியது. இந்நிலையில் டூத் பேஸ்ட் பிராண்ட் விளம்பரத்தில் நடித்துள்ள ஸ்மிருதி மந்தனாவின் கைகளில் நிச்சயதார்த்த மோதிரம் இருக்கவில்லை.
மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் ஸ்டேடியத்தில் வைத்து பலஷ் முச்சல் ஸ்மிருதி மந்தனாவுக்கு மோதிரத்தை அணிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.