புஜாராவின் மைத்துனர் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி காரணம்!
சேதேஸ்வர் புஜாராவின் மைத்துனர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சேதேஸ்வர் புஜாரா
குஜராத், ராஜ்கோட்டை சேர்ந்தவர் சேதேஸ்வர் புஜாரா. மொத்தம் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள புஜரா 7,195 ரன்கள் குவித்திருந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் புஜாரா தனது ஓய்வை அறிவித்தார். இவரது மனைவி பூஜா பாபரி. இவரது தம்பியின் பெயர் ஜீத் பாபரி(30). ஜீத் பாபரிக்கு திருமணம் முடிந்துவிட்டது. மனைவி மற்றும் தாயுடன் அவர் வசித்து வந்தார்.
மைத்துனர் தற்கொலை
இந்நிலையில், ஜீத் பாபரி தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுபற்றி மாளாவியா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கடந்த 2024ம் ஆண்டில் ஜீத் பாபரிக்கும், ஒரு பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

அந்த பெண்ணே அவர் மீது பாலியல் புகார் வழங்கினார். தற்போது அவர் ஜாமீனில் இருந்த நிலையில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் அவருக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தற்கொலைக்கு காரணமாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
யாழில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் ''நீதியின் ஓலம் 2" : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு IBC Tamil
17 ஆண்டுகால வெற்றி கூட்டணி முடிவிற்கு வந்தது : சிஎஸ்கேவை விட்டு விலகினார் ஸ்டீபன் பிளெமிங்! IBC Tamil