தோழியின் கணவரைத் திருமணம் செய்துகொண்டேனா - கொதித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி!
ஸ்மிருதி இரானி தன்னுடைய தோழியின் கணவரைத் திருமணம் செய்துகொண்டதாக சலசலப்பு ஏற்பட்டது.
ஸ்மிருதி இரானி
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 2001-ம் ஆண்டு ஜூபின் இரானி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜோர் என்ற மகனும், ஜோயிஷ் என்ற மகளும் இருக்கின்றனர்.
முன்னதாக, ஜூபின் இரானி, மோனா இரானி என்பவரைத் திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு ஷனெல்லே என்ற மகள் இருக்கிறார். தொடர்ந்து, ஸ்மிருதி இரானி தன்னுடைய தோழியின் கணவரைத் திருமணம் செய்துகொண்டார் என சலசலப்பு ஏற்பட்ட வண்ணம் இருந்தது.
திருமணம்
இந்நிலையில், இன்ஸ்டாவில் தனது ஆதரவாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக உரையாடினார். அதில் திருமணம் குறித்த கேள்விக்கு, ஜூபின் இரானி-யின் முன்னாள் மனைவி மோனா என்னைவிட 13 வயது பெரியவர்.
அவர் என் குழந்தைப் பருவத் தோழியாக இருக்க முடியாது. எனவே, அது தொடர்பான கேள்விகளைத் தவிர்க்க விரும்புகிறேன். மோனாவுக்கு குழந்தை, குடும்பம் இருக்கிறது.
அவருக்கான மரியாதையைக் கொடுக்க வேண்டும். அவர் அரசியலில் இல்லை என்பதால், அவர் குறித்துப் பேச வேண்டிய அவசியமில்லை. எந்தக் கேள்வியாக இருந்தாலும், என்னைப் பற்றிக் கேளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.