மாதவிடாய் குறைபாடு இல்லை..!! லீவு கொடுக்க முடியாது..!! ஸ்மிருதி இரானி
மாதவிடாய் விடுப்புக்கான சட்டத்தை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கிறதா என்ற கேள்விக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்துள்ளார்.
மாதவிடாய்
பெண்கள் மாதவிடாய் நாட்களில் எதிர்கொள்ளும் இன்னல்களை தீர்க்க மகளிர் அமைப்புகள் ஆளும் அரசுகளை வலியுறுத்தி வருகின்றன. மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அவசியம் என்றும் சில வலியுறுதல்கள் இருந்து வருகின்றன.
மாநிலங்களவையில் நேற்று இக்கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. மனோஜ் குமார் ஜா என்ற ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் இக்கேள்வியினை முன்வைத்தார். அப்போது பதிலளித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி, "பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது" என்று குறிப்பிட்டார்.
குறைபாடு அல்ல
தொடர்ந்து பேசிய அவர், "மாதவிடாய் என்பது ஒரு குறைபாடு அல்ல, அது பெண்களின் வாழ்வில் இயல்பானது என்று குறிப்பிட்டு, மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அவர் அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டி, இவை பெரும்பாலும் மருந்துகள் மூலம் சரிசெய்யக்கூடியவையே என்பதையும் குறிப்பிட்டார். மேலும், பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது" என்று கூறினார்.