Lok Sabha அத்துமீறல் - அவரின் அழுத்தத்தால் தான் பாஸ் வழங்கினேன்- பாஜக எம்.பி விளக்கம்..!

BJP Delhi India
By Karthick Dec 14, 2023 04:20 AM GMT
Report

 நாடெங்கிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பாஜக எம்.பி விளக்கமளித்துள்ளார்.

மக்களவை விவகாரம்

இருவர் நேற்று மக்களவை அலுவல் நடந்து கொண்டிருந்த போது சட்டென உள்ளே குதித்து, மர்ம பொருளை வீசி புகை மூட்டத்தை ஏற்படுத்தியது தெரிந்த விஷயமே.

did-give-pass-only-on-his-fathers-pressure-prathap

இந்திய ஜனநாயகத்தின் கோவில் என கூறப்படும் இந்திய நாடாளுமன்றத்தில் 4 அடுக்க பாதுகாப்பை மீறி இந்த செயலில் இருவர் ஈடுபட்டுள்ளது விமர்சனனத்திற்குள்ளானதை தவிர, பெரும் அதிர்ச்சியையே பலருக்கும் கொடுத்துள்ளது.

Lok Sabha அத்துமீறல் - வெளியான தீவிரவாத மிரட்டல்..! காலிஸ்தான் தொடர்பா..?

Lok Sabha அத்துமீறல் - வெளியான தீவிரவாத மிரட்டல்..! காலிஸ்தான் தொடர்பா..?

பாஜக எம்.பி விளக்கம்

இவர்களுக்கு நேற்று மக்களவைக்கு வர பயன்படுத்திய பாஸ் மைசூர் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவின் பேரில் வழங்கப்பட்டவையாகும். இந்நிலையில், தான் பலரும் அவரை குறித்து விமர்சனங்களை வைக்க துவங்கினர்.

did-give-pass-only-on-his-fathers-pressure-prathap

இந்நிலையில், விவகாரத்தில் தொடர்புடைய பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா சந்தித்து தனது விளக்கத்தை அளித்துள்ளார். அதில், கைதான மனோரஞ்சன் தனது தொகுதியை சேர்ந்தவர் என்பதாலும் அவரின் தந்தையின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக தான் பாஸ் வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.