Lok Sabha அத்துமீறல் - வெளியான தீவிரவாத மிரட்டல்..! காலிஸ்தான் தொடர்பா..?

Delhi India Punjab
By Karthick Dec 14, 2023 02:18 AM GMT
Report

நேற்று மக்களவையில் திடீரென உள்ளே நுழநைத இருவர், தங்களிடம் இருந்த மர்ம பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நாடெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை

அத்துமீறல் நேற்று மக்களவை அலுவல் நடைபெற்று வந்த நிலையில், திடீரென பார்வையாளர் அரங்கில் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் மக்களவை அரங்கில் திடீரென உள்ளே நுழைந்துள்ளனர்.

is-there-khalistan-connection-in-parliament-attack

அவர்கள் தங்களிடம் இருந்த மர்ம பொருள் ஒன்றை வீச, அதிலிருந்து புகையும் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. மக்களவைகுள்ளே இவ்வாறு நடந்ததற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

காலிஸ்தான் தொடர்பா..?

அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர் மைசூரை சேர்ந்த மனோரஞ்சன் என்பவர் என்பதும், அவர் பொறியியல் மாணவர் என்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளது. மணிப்பூருக்கு ஆதரவாக மக்களவை உள்ளே நுழைந்த இவர்கள் முழக்கமிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Lok Sabha - பாஜக எம்.பி'யின் பரிந்துரையில் வந்தவர்கள் .!! பரபரப்பு தகவல்...!!

Lok Sabha - பாஜக எம்.பி'யின் பரிந்துரையில் வந்தவர்கள் .!! பரபரப்பு தகவல்...!!

இந்த சம்பவத்தில் தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், மற்றொரு திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த விவாகரத்திற்கு காலிஸ்தான் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முன்னதாக அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமை பெற்றுள்ள காலிஸ்தான் தீவிரவாதியும், ‘நீதிக்கான சீக்கியர் அமைப்பின்’ தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னு, சில நாட்களுக்கு முன்பு மிரட்டல் விடுத்திருந்தார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் குறித்து உயர்நிலை விசாரணைக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். மக்களவையில் புகைக் குப்பி வீச்சு தாக்குதலால் ஒத்திவைக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது பேசிய அவர், 'இது கவலை அளிக்கக் கூடிய சம்பவம். உயர்நிலை விசாரணை நடத்த தில்லி போலீஸுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் வீசிய வண்ணப் புகை சாதாரணமானதுதான்.

is-there-khalistan-connection-in-parliament-attack

பரபரப்பை ஏற்படுத்த அவர்கள் வீசியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது' என்றார். புகைக் குப்பி வீசியவர்களை உடனடியாக மடக்கிப் பிடித்த எம்.பி.க்கள், பாதுகாப்புப் படையினர், அதிகாரிகள், அவைக் காவலர்கள் ஆகியோரின் செயல்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவம் காலிஸ்தான் பயங்கரவாதிகள் விடுத்த எச்சரிக்கையுடன் தொடர்புடையதல்ல என்றார்.