Lok Sabha - பாஜக எம்.பி'யின் பரிந்துரையில் வந்தவர்கள் .!! பரபரப்பு தகவல்...!!
இன்று மக்களவைக்கு இரண்டு இளைஞர்கள் திடீரென உள்ளே புகுந்து மர்மபொருளை வீசியதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவை விவகாரம்
இன்று மக்களவை அலுவல் நடந்து கொண்டிருந்த போது, திடீரென பார்வையாளர் அரங்கில் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் மக்களவை அரங்கில் திடீரென உள்ளே நுழைந்துள்ளனர்.
அவர்கள் தங்களிடம் இருந்த மர்ம பொருள் ஒன்றை வீச, அதிலிருந்து புகையும் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. மக்களவைகுள்ளே இவ்வாறு நடந்ததற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மைசூர் MP
அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர் மைசூரை சேர்ந்த மனோரஞ்சன் என்பவர் என்பதும், அவர் பொறியியல் மாணவர் என்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளது. மணிப்பூருக்கு ஆதரவாக மக்களவை உள்ளே நுழைந்த இவர்கள் முழக்கமிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சம்பவத்தில் தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது பார்வையாளர் அரங்கில் இவர்கள் அமர அவர்களுக்கு, நுழைவு சீட்டு வாங்கிக்கொடுத்து பாஜகவின் எம். பி தான் என்ற செய்தி வெளிவந்துள்ளது.
கர்நாடக மாநில மைசூரு பாஜக எம்.பி ப்ரதாப் சிம்ஹா தான் அவர்கள் இருவருக்கும் பார்வையாளர் அனுமதி சீட்டு வாங்கி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.