பாதுகாப்பு கோளாறு - மக்களவையில் உள்ளே குதித்த இளைஞர்கள்..! உச்சகட்ட பரபரப்பு
நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர், அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகளுக்கு மத்தியில் தாவி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவை கூட்டம்
நாடாளுமன்றம் மீதான தாக்குதல் நடந்து 22 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அதேநாளில் மற்றும் ஒரு அசம்பாவிதம் இன்று நாடாளுமன்றத்தில் அரங்கேறி பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
இன்று மக்களவையில் அலுவல்கள் நடந்து கொண்டிருந்த போது, திடீரென பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் தடுப்புகளை தாண்டி அவைக்குள் பிரவேசித்துள்ளனர். எம்.பி.க்கள் அமர்ந்திருந்த சேர் மற்றும் டேபிள்கள் மீது தாவிச் சென்ற அவர்கள் மர்மப் பொருட்களை வீசியெறிந்ததாகவும் அதில் இருந்து புகை வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
அந்த இளைஞர்கள் இருவரையும் மக்களவை உறுப்பினர்களே சுற்றி வளைத்துப் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, நாடாளுமன்றமே பரபரப்பான நிலையில், மக்களவை அவைத்தலைவர் உடனடியாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். அதே போல, நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே கோஷங்களை எழுப்பி வந்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.