மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மகள் திருமணம் - வைரல் ஃபோட்டோஸ்

Marriage Rajasthan Viral Photos
By Sumathi Feb 10, 2023 10:59 AM GMT
Report

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மகள் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஸ்மிருதி இராணி மகள் 

ஸ்மிருதி இரானி தற்போது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். ஸ்மிருதி இரானி 2001 இல் ஜூபின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜோயிஷ் இரானி மற்றும் ஜோர் இரானி ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மகள் திருமணம் - வைரல் ஃபோட்டோஸ் | Smriti Irani S Daughter Marriage Viral Images

ஸ்மிருதி இரானியின் கணவர் ஜூபின் இரானியின் முதல் மனைவி மோனா இரானியின் மகள் ஷனெல். ஷனெல் இராணி ஒரு வழக்கறிஞர் மற்றும் மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்தவர். அதன்பின்னர், வாஷிங்டன் டிசியில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக சட்ட மையத்தில் தனது எல்எல்எம் பட்டம் பெற்றார்.

திருமணம்

அர்ஜுன் பல்லா கனடாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆவார். 2021 ஆம் ஆண்டில், ஷனெல் மற்றும் அர்ஜுனின் நிச்சயதார்த்தத்தை இன்ஸ்டாகிராம் மூலம் ஸ்மிருதி அறிவித்தார். இவர்களது திருமணம் வியாழன் அன்று ராஜஸ்தானின் கிம்சார் கோட்டையில் நடைபெற்றது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மகள் திருமணம் - வைரல் ஃபோட்டோஸ் | Smriti Irani S Daughter Marriage Viral Images

திருமணத்தின்போது ஷனெல் சிவப்பு நிற மணப்பெண் லெஹங்கா அணிந்திருந்தார். அதே சமயம் அர்ஜுன் வெள்ளை நிற ஷர்வானி அணிந்திருந்தார். அவர்களது திருமணம் குறித்த அதிகாரபூர்வ படங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்றாலும், விருந்தினர்கள் சிலர் எடுத்த படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.