உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் Smoke Biscuit?? அதிரடி உத்தரவிட்ட உணவுப்பாதுகாப்புத்துறை

Tamil nadu Chennai Junk Food
By Karthick Apr 24, 2024 09:02 AM GMT
Report

திரவ நைட்ரஜனால் செய்யப்படும் உணவுகளை விற்பனை செய்யக்கூடாது என உணவுப்பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது

திரவ நைட்ரஜன்

உணவகங்களில் பதப்படுத்தி வைக்க உபயோகிக்கப்படும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி Smoke Biscuit, Smoke பீடா என பல உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

smoke-biscuit-banned-in-tamil-nadu

திருமண நிகழ்ச்சிகளில், திருவிழாக்களில் இந்த உணவு வகைகள் மக்களின் கவனத்தை பெறுகின்றன. இவை உடல் நலத்திற்கு தீங்கானதா..? என்பதையும் அறியாமல் மக்கள் குழந்தைகளுக்கும் வாங்கி தருகிறார்கள்.

பிரியாணி பிளேட்டில் ராமர் படம்; வைரலாகும் வீடியோ - வெடித்த சர்ச்சை!

பிரியாணி பிளேட்டில் ராமர் படம்; வைரலாகும் வீடியோ - வெடித்த சர்ச்சை!

அண்மையில், கர்நாடக மாநிலத்தில் சிறுவன் ஒருவன் பொருட்காட்சியில் இவ்வகையான smoke பிஸ்கட்டை சாப்பிட்டு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு மயங்கி விழுந்த வீடியோ வைரலாகியது.

smoke-biscuit-banned-in-tamil-nadu

இதனை தொடர்ந்து, இந்த வகை உணவுகளுக்கு தடை விதிக்கவேண்டும் என தொடர்ந்து வலியறுத்தல்கள் எழுந்தது. இது தொடர்பாக உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளுக்கு நைட்ரஜன் கலந்த எந்த உணவுப்பொருட்களையும் வழங்கக்கூடாது.

smoke-biscuit-banned-in-tamil-nadu

உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்பனை செய்ய கூடாது. இதனையும் மீறி டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும், இந்த டிரை ஐசை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண்பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதாகவும், உயிரிழப்புகள் நேரலாம் என்றும் உணவுப்பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.