பிரியாணி பிளேட்டில் ராமர் படம்; வைரலாகும் வீடியோ - வெடித்த சர்ச்சை!
ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்பட்ட சம்பவத்தால் சர்ச்சை வெடித்துள்ளது.
பிரியாணி பிளேட்
டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியது. அந்த வீடியோவில் ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது.
சர்ச்சை வீடியோ
அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. உடனே கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காவல்துறையில் புகாரளித்தனர்.
Jahangirpuri, Delhi: Biriyani was being served on paper plates with images of Lord Rama, locals and Bajrang dal object and complained to Police.
— Megh Updates ?™ (@MeghUpdates) April 23, 2024
Investigation on.....https://t.co/gcojcxZYgU pic.twitter.com/HgxcgFEnke
தகவலறிந்த உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன.
ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.