மைதானத்தில் வைத்து ஸ்மிருதிக்கு ப்ரொபோஸ் செய்த காதலன் - வீடியோ வைரல்
மைதானத்தில் வைத்து ஸ்மிருதி மந்தனாவுக்கு அவரது காதலன் ப்ரொபோஸ் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா இருந்து வருகிறார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வரும்

ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் இந்திய அணி வென்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கிய பங்கு வகித்தார். மகளிர் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார்.
இவரும் பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
ப்ரொபோசல் வீடியோ
இந்த நிலையில் தனது காதலி ஸ்மிருதி மந்தனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவரது கண்களை கட்டிய பலாஷ் மைதானத்தில் வைத்து ப்ரொபோஸ் செய்துள்ளார். மைதானத்தின் நடுப்பகுதிக்கு ஸ்மிருதி மந்தனாவை அழைத்து வந்த அவர்,
பின்னர் முழங்காலிட்டு அமர்ந்து ரோஜா பூங்கொத்து மற்றும் மோதிரத்தை அவரிடம் வழங்கி தனது காதலை தெரிவித்து திருமணம் செய்து கொள்வாயா என கேட்டார். அதற்கு ஸ்மிருதி மந்தனா ஆம் என்று கூறினார்.
தற்போது இது தொடர்பான வீடியோவை பலாஷ் முஞ்சால் சமூக வலைத்தளங்களில் வெளியிட அந்த வீடியோ வைரலாகி வருகிறது.