ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பு? ராஜஸ்தான் அணி எடுக்கப்போகும் முடிவு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா வருவார் என கூறப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
2026 ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இத்தொடருக்கு முன்னதாக வடும் டிசம்பர் நடுப்பகுதியில் அதாவது 14, 15 தேதிகளில் மினி ஏலம் நடக்கிறது.

இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேல் உள்ள அதிருப்தி காரணமாக சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து விலக அவர் முடிவு எடுத்துள்ளார். இதனால் அவரை வாங்க சில அணிகள் முண்டியடித்தன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் சஞ்சு சாம்சன் வேண்டும் என்றால் ரவீந்திர ஜடேஜா வேண்டும் என கேட்டதாகவும் அதற்கு சிஎஸ்கே அணியும் ஓப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியது.
கேப்டன் யார்?
இதனால் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஜடேஜா வருவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவர்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரரையே கேப்டனாக நியமிக்கும்.

அது யஷஸ்வி ஜெய்ஸ்லாலாக இருக்கும். அதற்கு ஜெய்ஸ்வால் நான் இங்கேயே இருக்கிறேன். எனக்கு கேப்டன் பதவி கொடுங்கள் என ராஜஸ்தான் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும்.
23 வயதே ஆகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னும் பல ஆண்டுகள் விளையாடுவார். அதேபோல் சில சீசன்களில் அவர் கேப்டனாக செயல்பட்டால் அவருக்கு அதன் அனுபவமும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.