மெல்ல குறைந்து வரும் Y குரோமோசோம்கள் - அப்போ ஆண் குழந்தைகளே பிறக்காதா?

World
By Swetha Aug 28, 2024 08:30 AM GMT
Report

  Y குரோமோசோம்கள் குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆண் குழந்தை

மனிதர்களின் பாலினத்தை தீர்மானிப்பது குரோமோசோம்கள் ஆகும். பெண்களுக்கு XX குரோமோசோம்களும் , ஆண்களுக்கு XY குரோமோசோம்களும் வகைப்படுகிறது. இந்த நிலையில், ஆண்தன்மையை தீர்மானிக்கும் Y குரோமோசோம்கள் சுருங்கி வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மெல்ல குறைந்து வரும் Y குரோமோசோம்கள் - அப்போ ஆண் குழந்தைகளே பிறக்காதா? | Slowly Decreasing Y Chromosome No Boy Child Future

அதாவது, X குரோமோசோம்கள் Y குரோமோசோம்களுடன் சேரும்பொழுது ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் அவற்றின் அழிவினால், வருங்காலங்களில் ஆண் குழந்தைகளே பிறக்காத நிலை உருவாகி அது இனப்பெருக்க சுழற்சியை உடைக்கலாம்.

இறக்கைகளுடன் பிறந்த ஆண் குழந்தை? படு வைரலாகும் வீடியோ!

இறக்கைகளுடன் பிறந்த ஆண் குழந்தை? படு வைரலாகும் வீடியோ!

Y குரோமோசோம்

ஆரம்பத்தில் மனிதனில் உள்ள Y குரோமோசோம்களில் 1,438 மரபணுக்கள் இருந்த நிலையில் கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் அவற்றில் 1,393 மரபணுக்கள் அழிந்துவிட்டது. தற்போது Y குரோமோசோம்களில் 40 மரபணுக்கள் மட்டுமே மிச்சமுள்ளது.

மெல்ல குறைந்து வரும் Y குரோமோசோம்கள் - அப்போ ஆண் குழந்தைகளே பிறக்காதா? | Slowly Decreasing Y Chromosome No Boy Child Future

இதே போல தொடர்ந்தால் அடுத்த 11 மில்லியன் ஆண்டுகளில் அவை மொத்தமாக அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். எனவே 11 மில்லியன் ஆண்டுகள் கழித்து என்ன நடக்கும் என்ற கேள்விக்கும் விஞ்ஞானிகள் பதில் வைத்துள்ளனர்.

ஸ்பைனி எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தபோது, அவற்றில் Y குரோமோசோம்கள் முற்றிலுமாக அழிந்த பிறகு புதிய வகையான குரோமோசோம்கள் பரிணமித்துள்ளது கண்டறியப்பட்டது. ஆகையால், மனிதர்களிடம் Y குரோமோசோம்கள் முற்றிலுமாக அழியும் போது, புதிய வகையிலான பாலினங்கள் உருவாகும் என்று நம்பப்படுகிறது.