மோடி கார் மீது செருப்பு வீச்சு; வன்முறைக்கும்,வெறுப்புக்கும் இடமில்லை - ராகுல் காந்தி கண்டனம்!
பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீசியதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
செருப்பு வீச்சு
3 வது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாக தன் சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற விவசாயிகளுக்கான பிஎம் கிசான் நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி வழங்கும் மாநாட்டில் அவர் பங்கேற்றார்.
இத்திட்டத்தின் 17-வது தவணைத் தொகையை 9.26 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான தொகையை நேரடி பணப் பரிமாற்றம் மூலம் மோடி விடுவித்தார். மேலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக தம்மைத் தேர்வு செய்ததற்காக அவர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் காரில் செல்லும் போது சாலையின் இரு பக்கமும் மக்கள் நின்று வரவேற்கிறார்கள். எதிர்பாராதவிதமாக செருப்பு ஒன்று மோடி கார் மீது வந்து விழுகிறது. மோடியின் காரில் நின்றுகொண்டுள்ள பாதுகாவலர் அந்த செருப்பை அப்புறப்படுத்துகிறார்.
ராகுல் காந்தி கண்டனம்
அந்த வீடியோ சமூக வலைத்தளபக்கத்தில் தீயாய் வைரலானதை தொடர்ந்து பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் மோடி கான்வாய் மீது காலணி வீசிய சம்பவம் கண்டிக்கத்தக்கது. அரசின் கொள்கைகளுக்கு எதிரான கண்டனத்தை காந்திய வழியில் பதிவு செய்ய வேண்டும்; ஜனநாயகத்தில் வன்முறைக்கும், வெறுப்புக்கும் இடமில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஸ்ரீநட்டே தனது எக்ஸ் பக்கத்தில், “மோடியின் வாகனத்தின் மீது செருப்பு வீசியது தவறுதான். ஆனால், அவ்வாறு செய்வதற்கு அவர்கள், தங்கள் பிரதிநிதிமீது எவ்வளவு அதிருப்தி அடைந்திருப்பர் என புரிந்துகொள்ள வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார்.
एक और महत्वपूर्ण बात जो प्रेस कॉन्फ्रेंस में कहनी रह गई।
— Rahul Gandhi (@RahulGandhi) June 20, 2024
नरेंद्र मोदी और उनके काफिले पर चप्पल फेंका जाना बहुत ही निंदनीय है और उनकी सुरक्षा में गंभीर चूक है।
सरकार की नीतियों पर अपना विरोध गांधीवादी तरीके से दर्ज कराया जाना चाहिए, लोकतंत्र में हिंसा और नफ़रत की कोई जगह नहीं है।