தினமும் ஏசி அறையில் தூங்குவோர் கவனத்திற்கு! இந்த 6 உடல்நல பிரச்னைகள் வரலாம் தெரியுமா?
ஏசி போட்டுக் கொண்டு தூங்குவதால் ஏற்படக்கூடிய 6 உடல்நலப் பிரச்சனைகள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
ஏசி அறை
இந்த கோடை காலத்தின் வெப்பம் மக்களை கடுமையாக வாட்டுகிறது. இதில் இருந்து தப்பிக்க குளிர்ச்சி அறை மற்றும் குளிர் உணவுகளை நோக்கி அனைவரும் படை எடுக்கின்றனர். ஏசி அறையில் அமர்ந்திருக்கும் போது வெயின் தாக்கம் வெகுவாக குறைவதால் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி-யை பயன்படுத்துகிறார்கள்.
முக்கியமாக இரவில் நல்ல தூக்கத்தை பெறவும் பலர் ஏசி அறையை நாடுவது உண்டு. ஆனால் இது பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் என பலருக்கும் தெரியாது. ஏசி போட்டுக் கொண்டு தூங்குவதால் நமது உடலில் 6 பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
சுவாசப் பிரச்சனை
ஏசி அறையில் படுத்து உறங்குவதால் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக குளிர் காற்று ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும் ஏற்கனவே ஆஸ்துமா அல்லது அலர்ஜி போன்ற சுவாசப் பிரச்சனை உடையவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகம்.
ஏசியிலிருந்து வெளிவரும் குளிர் காற்று நமது சுவாசப் பாதையை எரிச்சல்படுத்தி இருமல், மூச்சிறைப்பு, நெஞ்சடைப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
கண் மற்றும் சரும வறட்சி
ஏசி அறையில் தூங்கும் போது. அந்த அரையின் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் நம் கண்களும் சருமமும் வறண்டு போகின்றனர்.
மேலும் நீண்ட நேரம் நம் உடலில் குளிர் காற்று படுவதால் கண்களில் எரிச்சலாகி கண் அரிப்பு, சிவந்து போதல், மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகளை அதிகப்படுத்தும்.
தசை இறுக்கம் மற்றும் வலி
ஏசி அறையில் உறங்குவதால் தசைகளில் இறுக்கமும் மூட்டுகளில் வலியும் ஏற்படுத்துக்கிறது. குளிர் வெப்பநிலை தசைகளை மரத்துபோகச் செய்கின்றன. மேலும் கீல்வாதம் அல்லது தசைக்கட்டு கோளாறு உடையவர்களுக்கு குளிர் காற்றின் காரணமாக மூட்டு வலி அதிகரிக்கும்.
இதை குறைக்க தூங்கும் போது போர்வைகளால் உடலை மூடிக் கொள்ளலாம். அதோடு தூங்கும் முன்பு உடலை நீட்டி வளைக்கும் பயிற்சிகளை செய்து தளர்வை கொடுக்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம்
ஏசி அறையில் சுவாச தொற்றுகள் வரும் ஆபத்து அதிகரிக்கும். ஏனென்றால் குளிர் காற்று நோய் எதிர்பு சக்தியை பலவீனப்படுத்தி எளிதில் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள் பரவுவதற்கு வழி வகுக்கும்.
நீண்ட நேரம் இருப்பதால் மேல் சுவாசப் பாதையில் உள்ள ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக உடலில் வைரஸ்களை தடுக்கும் சக்தி குறைந்து போகிறது.
தூக்கத்தை கெடுக்கிறது
ஏசிஅறையில் படுக்கும் போது நாம் தூங்கும் முறையில் இடைஞ்சல்கள் ஏற்பட்டு தூக்கம் பாதிக்கப்படுகிறது. அதுவும் ஏசியின் வெப்பநிலையை மிகவும் குறைவாக வைத்திருந்தாலோ அல்லது ஏசியிலிருந்து வரும் ஓசையின் காரணமாகவோ உங்கள் தூக்கம் பாழாகிறது.
குளிர் அதிகமாக இருப்பதால் நடு இரவில் முழித்துக்கொள்ளும் சூழலும் ஏற்படுகிறது.
அலர்ஜியை அதிகப்படுத்தும்
ஏசி இயந்திரத்தை ஒழுங்காக பராமரிக்காவிட்டால் அறை முழுவதும் தூசிகள், அழுக்குகள், பொடுகுகள் ஆகியவற்றை பரவச்செய்யும்.அது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.
ஏசி அறையில் உள்ள குளிர் வெப்பநிலையால் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும். இதனால் ஒவ்வாமை மற்றும் காற்று மாசுபடுத்திகள் அறையில் சேகரமாவதற்கு அதிக வாய்ப்புள்ளது.