தென்னாப்பிரிக்கா டெஸ்ட் - 100 ஆண்டு வரலாற்றில் மோசமான சாதனை படைத்த இலங்கை
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மோசமான சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட்
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இலங்கை அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதன் முதல் டெஸ்ட் போட்டி டர்பன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த தென் ஆப்பரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
120 ஆண்டு சாதனை
அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி வெறும் 42 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மார்கோ ஜான்சன் 13 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இலங்கை தரப்பில் கமிந்து மெண்டிஸ் மற்றும் லஹிரு குமார மட்டுமே இரட்டை இலக்கங்களில் ரன் குவித்தனர். 5 பேர் டக் அவுட் ஆகியுள்ளனர்.
இலங்கை அணி வெறும் 83 பந்துகளில் (13.5 ஓவர்கள்) ஆல் அவுட் ஆகி, கடந்த 100 ஆண்டில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் மிகக்குறைவான பந்தில் ஆல் அவுட்டான முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் இலங்கை தனது டெஸ்ட் வரலாற்றில் எடுத்த குறைந்த பட்ச ஸ்கோர் இதுவாகும்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7க்கும் குறைவான ஓவர்கள் வீசி 7 விக்கெட்டை கைப்பற்றிய பவுலர் என்ற சாதனையை தென் ஆப்பரிக்காவின் மார்கோ ஜான்சன் படைத்துள்ளார். 120 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவின் ஹக் ட்ரம்பிள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.