தகாத நடத்தை - முன்னாள் வீரருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் 20 வருட தடை!
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
துலிப் சமரவீர
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் துலிப் சமரவீர. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றியாளராக இருந்துள்ளார்.
இந்நிலையில் இவர் பெண் வீராங்கனையிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
20 வருட தடை
இதற்கிடையில், இந்திய மகளிர் ஏ அணிக்கு எதிரான தொடரின் போது ஆஸ்திரேலியா ஏ அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படக்கூடிய பட்டியலில் துலிப் சமரவீரவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
ஆனால், இந்த தகாதசெயற்பாடு குறித்த குற்றச்சாட்டு காரணமாக அவர் அந்த வாய்ப்பிலிருந்து விலகிக் கொண்டார். தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தற்போதைக்கு எவ்வித கருத்துக்களையும் வெளியிடப் போவதில்லை எனவும் விக்டோரியா கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், அவர் ஆஸ்திரேலியாவில் பயிற்சி வழங்குவற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை 20 வருட தடை விதித்துள்ளது.