சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்கள் - சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம்!
சருமத்தை வெண்மையாக்கும் அழகு சாதனப் பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அழகு சாதனப்பொருட்கள்
பலரும் தனது உடலை வெண்மையாக்க பல்வேறு விதமான அழகு சாதனப்பொருளான க்ரீம்களை பயன்படுத்தி வருகின்றனர்.
விளம்பரங்களை பார்த்து, மருத்துவர்களின் எவ்வித பரிந்துரையும் இன்றியும் அவற்றை வாங்கி உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இந்நிலையில், தேசிய வைத்தியசாலையின் தோல் சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகையில், ”24 மணி நேரத்தில், நான் சமார் 60 நோயாளிகளை பரிசோதித்தேன். அதில் 10%, வெண்மையாக்கும் க்ரீமினால் ஏற்படும் பிரச்சனைகளுடன் வந்தனர்.
சிறுநீரக நோய்
இவை நீண்ட காலமல்ல, குறுகிய கால பிரச்சினை. இப்போது நான் சில விஷயங்களைப் பார்க்கிறேன். உதாரணத்திற்கு, உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால் கருப்பு நிறமாக மாறுகிறது. அனைத்திற்கும் பொதுவான காரணி வெள்ளையாக்கும் க்ரீம்கள்.
மேலும், நகங்கள் பழுப்பு நிறமாக, ஆரஞ்ச் நிறமாக மாறும். இவை முன்பை விட அதிகமாக காணப்படுகின்றன.
குறுகிய கால பக்க விளைவுகள் அதிகரித்து வருகின்றன. புற்றுநோய்க்கு முன் சிறுநீரகங்கள் மோசமடைந்து உயிர் சேதமும் ஏற்படுகிறது" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.