தோண்ட தோண்ட மனித எலும்புகூடுகள்; மிரண்ட பணியாளர்கள் - என்ன பின்னணி?
நிலத்தில் குவிந்து கிடந்த எலும்புகூடுகளை கண்ட பணியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மர்மப்பொருள்
மேற்கு மெக்சிகோவில், சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வந்தனர். பணியாளர்கள் அனைவரும் நிலத்தை தோண்டும் பணியை மேற்கொண்டபோது திடீரென ஒரு சத்தம் கேட்டுள்ளது.
கல்லாக இருக்ககூடும் என்று தொடர்ந்து தோண்டும்போது திடீரென ஒரு எலும்புகூடு தென்பட்டுள்ளது.
அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் மிருகங்களோடதாக இருக்கலாம் என மன தைரியத்துடன் நிலத்தை தோண்ட ஆரம்பித்தனர்.
ஷாக் சம்பவம்
இந்நிலையில், சிறிது நேரத்திலேயே ஒரு எலும்புக்கூடு குவியல் வந்துள்ளது. அதை பார்த்து பதறிய பணியாளர்கள் வேலையை பாதியில் நிறுத்தி விட்டு சென்றுள்ளனர்.
இதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வளர்கள் அந்த எலும்பு கூடுகள் கிடைத்தது எப்படி என ஆரய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அதில்,1500 ஆண்டுகள் பழமையான இந்த எலும்புகூடுகள் ஆண்களுடையது என தெரியவந்துள்ளது.
மேலும், கல்லறையில் புதைந்து கிடந்த எழும்புகளை ஏதோ சடங்கிற்காக இங்கு குவியலாக கொட்டப்பட்டுள்ளது என கண்டறிந்துள்ளனர்.