கீழடியில் கிடைத்த குழந்தை தலைப்பகுதி: ஆச்சிரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
உலக புகழ்பெற்ற கீழடியில் தற்போது குழந்தையின் மண்டை ஓடு கிடைத்துள்ளதால் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
மதுரையை ஒட்டியுள்ள சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடி பகுதியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக 7ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.
கொரோனா முதல் அலையின் போது கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த சூழலில் 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளுக்கு இடையே கொரோனா 2ஆவது அலை ஏற்பட்டது.
இதனால் ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் அகழாய்வுப் பணிகள் துவங்கின.
இங்கு நடக்கும் பணிகள் குறித்து தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 12ஆம் தேதி பார்வையிட்டார். அப்போது அவருடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர் பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த தங்கம் தென்னரசு, இந்தியத் தொல்லியல் துறையிடம் முதல் மூன்று கட்டமாக நடைபெற்ற கீழடி, ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையுள் கேட்டுள்ளோம். அவை வர வேண்டியதுள்ளது என தெரிவித்தார்.
மேலும், மணலூர் பகுதியில் அகழாய்வு மேற்கொண்டபோது குழந்தையின் எலும்பு ஒன்று கிடைத்துள்ளது. கீழடி அகழாய்வில் இதுவரை சுடுக்காட்டு பகுதி, மக்கள் வாழ்விட பகுதி கண்டுபிடிக்கபட்டது என்றும் முதன் முறையாக குழந்தையின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.