என்ன திட்டுறவங்களுக்கு...இத தான் சொல்லணும் - முதல் முறை மௌனம் களைத்த SK..!!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் "அயலான்".
அயலான்
2018-ஆம் ஆண்டு சயின்ஸ் ஃபிக்ஷன் கதைக்களத்தில் வெளியான "இன்று நேற்று நாளை" படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயனுடன் இணைத்த அயலான் படம் நீண்ட காலமாக தள்ளி போனது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில், ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் நடிக்க மிக பெரிய பொருட்செலவில் தயாரான இப்படம் தற்போது பொங்கல் வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.
என்ன திட்டுறவங்களுக்கு...
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் நேற்று(26-12-23) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசிய கருத்துக்கள் வைரலாகி வருகின்றது.
அவர் பேசியது வருமாறு - என்னை சிலர் சூப்பர்'னு சொல்வாங்க சிலர் Inspiration'னு சொல்லுவாங்க, சில பேர் திட்டுவாங்க.. ஆனா நா இதையெல்லாம் எடுத்துக்குறதே இல்லை.
என் ஹேட்டர்ஸை நான் ஒன்னுமே சொல்ல விரும்பல, என்னை புடிச்சவங்களுக்காக எப்போதும் போல என் வழி'ல நான் ஓடிட்டே இருக்கேன் என பேசினார்.