இரவு விருந்து வைத்த காதலி; அந்த ஃபோன் கால், திறக்காத கதவு - திருமணம் குறித்து எஸ்ஜே சூர்யா!

S J Surya Tamil Cinema
By Sumathi Dec 26, 2023 05:30 PM GMT
Report

தான் திருமணம் செய்துக் கொள்ளாத காரணம் குறித்து எஸ்ஜே சூர்யா பகிர்ந்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா 

எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக அறிமுகமான படங்கள் வாலி, குஷி இரண்டுமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வியாபாரி, நியூ, இசை ஆகிய படங்கை இயக்கி அவரே நடிப்பில் களமிறங்கினார்.

director sj surya

மெர்சல், மாநாடு படங்களில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அண்மையில் மார்க் ஆண்டனி, ஜிகார்தாண்டா டபுள் எக்ஸ் படங்களில் மிரட்டியிருந்தார். இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார். அதுகுறித்து அவர் பேசுகையில்,

54 வயசாச்சு கல்யாணம் எப்போது? காதலிக்கிறேன் - எஸ்.ஜே. சூர்யா சொன்ன பதில்!

54 வயசாச்சு கல்யாணம் எப்போது? காதலிக்கிறேன் - எஸ்.ஜே. சூர்யா சொன்ன பதில்!

திருமணம்?

அன்பே ஆருயிரே படக்கதையும் என் காதல் கதையும் ஏறக்குறைய ஒன்னு தான். அதனால் தான் அந்த கதையை எடுத்தேன். என்னுடைய உண்மையான காதல் கதையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அந்த படத்தை பாருங்க. இரவு விருந்துக்காக என் காதலி ஏற்பாடு செய்திருந்தார்.

இரவு விருந்து வைத்த காதலி; அந்த ஃபோன் கால், திறக்காத கதவு - திருமணம் குறித்து எஸ்ஜே சூர்யா! | Sj Surya About Love Failure And Marriage

அந்த நேரத்தில் தான் ஒரு பெரிய தயாரிப்பாளரிடம் இருந்து எனக்கு போன் வந்தது, இப்போது தான் ப்ரீயா இருக்கேன் உடனே பேச வாங்க என்றார். நான் உடனே என் காதலியிடம் அவசரமான வேலை இருக்கிறது என்று சொல்விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன். இரவு 12 மணி வரை மீட்டிங் இருந்தது.

அதை முடித்துவிட்டு காதலியின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டினே, அப்போது அவள், இது ஒன்றும் சத்திரம் இல்லை என்று சொல்லி முகத்தில் அடித்தது போல கதவை மூடிவிட்டார். அப்போது மூடப்பட்ட என் இதயம் இப்போது வரை மூடியே இருக்கிறது என வேதனை பகிர்ந்துள்ளார்.