சாகப்போறனு அப்பா அம்மாகிட்ட சொல்ல வேணாம் Please - 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சி கோரிக்கை!
மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டரில் சிகிச்சை பெற்ற 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சியான கதையை பகிர்ந்துள்ளார்.
மூளை புற்றுநோய்
டாக்டர் சுதீர் குமார் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராக பணியாற்றி வருகிறார். இவரிடம் 10 மாதங்களுக்கு முன்பு ஒரு இளம் தம்பதியினர் தனது 6 வயது மகன் மனுவின் சிகிச்சைக்காக அணுகியுள்ளனர்.

அச்சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவனுக்கு அரிய வகை மூளை புற்றுநோய் பாதிக்கப்பட்டதை கண்டறிந்தார். எனவே, அச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, கீமோதெரப்பி சிகிச்சையும் வழங்கப்பட்டது. இந்நிலையில், மனுவின் பெற்றோர் மருத்துவர் சுதீரிடம் தனது மகனுக்கு நோயின் தன்மையை எடுத்துக்கூறி புரிய வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சிறுவன் கோரிக்கை
இந்த கோரிக்கையை ஏற்று அவர் சிறுவனிடம் உனக்கு இந்த நோய் உள்ளது, ஆகவே இவ்வாறு சிகிச்சை தருவோம் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட அந்த சிறுவன், மருத்துவரிடம் தனியாக சென்று, அவன் தனது மருத்துவ அறிக்கையை வைத்து தனக்கு என்ன பாதிப்பு என்பதை இணையத்தில் தெரிந்து கொண்டதாகவும்,
மேலும் தான் 6 மாதம் தான் உயிரோடு இருக்க முடியும் என்பதை அறிந்து கொண்டதாகவும் கூறி, இது குறித்து எனது பெற்றோரிடம் எதுவும் கூற வேண்டாம், அவர்கள் என் மீது மிகுந்த பாசத்துடன் உள்ளார்கள், ப்ளீஸ் சொல்ல வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளான். இதனை சற்றும் எதிர்பாராத மருத்துவர் வியப்படைந்தார்.
நெகிழ்ச்சி சம்பவம்
பின் மனுவின் பெற்றோரை சந்தித்து அவன் பேசியதை கூறி ஆறுதலும் கூறியுள்ளார். மகனின் வார்த்தைகளை கேட்டு அழுத பெற்றோர், அவன் உயிரோடு இருக்கும் காலத்தில் அவனுக்கு வேண்டிய சந்தோஷங்கள் அனைத்தையும் தர வேண்டும் என முடிவெடுத்து,
தங்கள் வேலைகளுக்கு தற்காலிக விடுப்பெடுத்து அனைத்து நேரத்தையும் மகனுடன் செலவிட்டு அவனை டிஸ்னிலான்டிற்கு அழைத்து சென்று அவனது ஆசைகளை நிறைவேற்றினர். மருத்துவர் இன்னொரு தெய்வத்திற்கு சமம் என்பதை உணர்த்தும் வகையில்,
அச்சிறுவனின் மரணத்திற்கு பின் அவனது பெற்றோர் மருத்துவர் சுதிரை பார்த்து வாழ்வின் சிறப்பான 8 மாதங்களை கொடுத்ததற்கு நன்றி கூறி சென்றுள்ளனர்.