காரில் சாய்ந்த 6 வயது சிறுவன் - காலால் எட்டி உதைத்து கொடூரமாக தாக்கிய இளைஞன் - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்...!

Viral Video Kerala
By Nandhini Nov 04, 2022 10:28 AM GMT
Report

கேரளா மாநிலத்தில் காரில் சாய்ந்த 6 வயது சிறுவனை காலால் எட்டி உதைத்து இளைஞன் கொடூரமாக தாக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய இளைஞன்

தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கேரளா மாநிலம், தலச்சேரி டவுன் பகுதியில் நேற்று மாலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் 6 வயது சிறுவன் சாய்ந்திருந்தான். அப்போது, கடைக்குச் சென்று விட்டு வந்த காரின் உரிமையாளர் காரில் சாய்ந்திருந்த சிறுவனை பார்த்தார்.

அப்போது, ஆவேசமாக வந்த இளைஞன் 6 வயது சிறுவதை காலால் எட்டி உடைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். தற்போது சமூகவலைத்தளங்களில் 6 வயது சிறுவனை இளைஞர் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் 6 வயது குழந்தையை எட்டி உதைத்த அந்த இளைஞனை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

kerala-six-year-old-boy-attack-viral-video