முதலில் அண்ணாமலை அப்டேட் ஆகட்டும் - பிறகு பதிலளிக்குறேன்!! அமைச்சர் சிவசங்கர்
முதலமைச்சர் ஜெய் ஸ்ரீ ராம் என கூறுவார் என அண்ணாமலை பேசியதற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
அண்ணாமலை கருத்து
ராமர்பிரான் குறித்து பேச்சு தமிழக அரசியலில் மீண்டும் கவனம் பெறுகிறது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பேசும் போது, மு.க.ஸ்டாலினே ஜெய் ஸ்ரீ ராம் என்பார் என கூறினார்.
மேலும், 2026-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு, அமைச்சர்கள் போட்டிபோட்டு கொண்டு ஜெய் ஸ்ரீ ராம் என்பார்கள் என கூறினார். இதற்கு இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்துள்ளார்.அவர் பேசியது வருமாறு,
சிவசங்கர் பதிலடி
பாவம்.,முதலில் அண்ணாமலை அப்டேட் ஆகணும்'னு நினைக்குறேன். முதல்';எ அவர் அப்டேட் ஆகணும். அவுங்க யாரை தூக்கிவைத்து கொண்டாடுகிறார்களோ...இந்திய ஒன்றியத்தின் பிரதமராக இருக்கும் மோடியே, ராமரை கைவிட்டு விட்டு ஜெகநாத்'தை போய் கை பிடிச்சிட்டாரு. அவரே அம்போன்னு விட்டுட்டாரு.
நீங்களே பார்த்திருப்பீங்க பதவி ஏற்பதற்கு முன்பாக, அவர்களின் எம்.பி, எம்.எல்.எல்'க்களிடம் பேசிய போதும் கட்சி தோழர்களிடம் பேசும் போதும், இது வரை ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்கி வந்த மோடி அவர்கள் ஜெய் ஜெகன்நாத் என்றுவிட்டாரு.
அவரே கட்சி மாறிட்டாரு.
ராமர் கிட்ட இருந்து ஜெகநாத்துக்கு. முதலில் அண்ணாமலை அப்டேட் ஆகட்டும், அப்புறம் பேசுவோம்.