விரைவில் மு.க.ஸ்டாலினே ஜெய் ஸ்ரீ ராம் என்பார் - பாஜக தலைவர் அண்ணாமலை!!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(07-08-2024) செய்தியாளர்களை சந்தித்த போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே விரைவில் ஜெய் ஸ்ரீ ராம் என கூறுவார் என தெரிவித்துள்ளார்.
விரைவில் நடவடிக்கை
செய்தியாளர்களை சந்தித்த போது, அவர் பேசியது வருமாறு, இன்று கட்சியில் இணைந்துள்ளவர்களை அன்புடன் வரவேற்கிறோம். குறிப்பாக, தென்னிந்திய மீனவர்கள் கூட்டமைப்பு முழு அமைப்பு தங்களை பாஜகவில் இணைந்து கொண்டுள்ளார்கள். அந்த அமைப்பின் தலைவர் ஜெயபாலைய்யன் தலைமையில் பலரும் இணைந்துள்ளார்கள். ராமேஸ்வரம் பகுதி மீனவ சொந்தங்கள் நேற்று வெளியுறவு அமைச்சரை சந்தித்து நேரம் கேட்டிருந்தோம்.
அப்போது மீன்வளத்துறை மற்றும் வெளியுறவு துறையின் அதிகாரிகளும் இருக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அவர்களும் இருந்தார்கள். அதிகப்படியான மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ் மீனவர்கள் 2024-ஆண்டில் மட்டும் 273 மீனவர்கள் பேர் கைதாகியுள்ளார்கள். அவர்களில் 204 பேர் விடுதலை பெற்றுவிட்ட போதிலும், இன்னும் 69 பேர் சிறையில் உள்ளார்கள்.
ஜெய் ஸ்ரீ ராம்
8 பேர் தண்டனை பெற்றும், மீதமுள்ளவர்கள் இலங்கையின் Judical custody'இல் இருக்கிறார்கள். அதனையெல்லாம் கவனத்திற்கு கொண்டு வந்தோம். அதற்கான விடுவிப்பதற்கான முயற்சியில் வெளியுறவுத்துறை அமைச்சர் இருக்கிறார்.
ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் அவர்களை தகுதி நீக்கம் செய்துள்ளார்கள். இந்த சம்பவம் இதயத்தை கனக்க செய்துள்ளது. இதுவரை 53 kg இல்லாததால், 50 kg'யில் போட்டியிட்டுள்ளார். 100 கிராம் அதிகமாக இருந்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது துரதிஷ்டவசமானது.
அப்போது அவரிடம், ராமர் குறித்து பேச்சுக்களை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், அண்மையில் பாஜகவின் நடவடிக்கைகள் திமுகவிற்கு அச்சத்தை கொடுத்துள்ளது. பழனியில் முருகன் மாநாடு நடத்துகிறோம் என கூறினார்கள்.
இதே வேகத்தில் போனார்கள் என்றால், மு.க.ஸ்டாலினே விரைவில் "ஜெய் ஸ்ரீ ராம்" என கூறிவிடுவார் போலும். 2026-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக திமுக அமைச்சர்கள் போட்டி போட்டு கொண்டு, ஜெய் ஸ்ரீ ராம் என கூறும் காலம் வந்துவிடும்.
இவ்வாறு அவர் பேசினார்.