திருவண்ணாமலை நிலச்சரிவு.. முன்கூட்டியே எச்சரித்த சிவன்மலை ஆண்டவர்- உணர்த்தியது எப்படி?

Tamil nadu Tiruvannamalai Tiruppur Cyclone Fengal
By Swetha Dec 06, 2024 04:17 AM GMT
Report

சிவன்மலை ஆண்டவன் திருவண்ணாமலை நிலச்சரிவு பற்றி எச்சரித்தது தெரியவந்துள்ளது.

சிவன்மலை ஆண்டவர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்ட பொருள் மறைமுகமாக அண்மையில் நடந்த மன்சரிவு பற்றி உணர்த்தியது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை நிலச்சரிவு.. முன்கூட்டியே எச்சரித்த சிவன்மலை ஆண்டவர்- உணர்த்தியது எப்படி? | Sivanmalai Andavar Warns Tiruvannamalai Land Slide

இந்த நிலையில், இப்படி ஒரு நிலச்சரிவு நடக்க போவதை சிவன்மலை ஆண்டவர் 20 நாட்களுக்கு முன்பே உணர்த்தி உள்ளதாக பக்தர்கள் கூறி வருகிறார்கள். அதாவது இந்த சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி முதல் பெட்டியில் மண் விளக்கு வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இந்த கோயில் அருணகிரி நாதரால் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. சிவன்மலை கோயில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டிதான். பக்தர்களின் கனவில் ஆண்டவன் வந்து, இந்த உத்தரவு பெட்டியில் குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய வேண்டும் என சொல்வார்.

அந்த பொருளை வைத்து பூஜை செய்தால் அதன் மூலம் நாட்டிற்கு ஏற்படும் நல்லது, கெட்டதுகளை உணர்த்தும் என சொல்லப்படுகிறது. ஒரு முறை மஞ்சள் வைத்து பூஜை செய்ய சொல்லப்படடது. அப்போது மஞ்சள் விலை உயர்ந்து விவசாயிகளுக்கு லாபம் கொழித்தது.

அது போல் ரூபாய் நோட்டு வைத்து பூஜை செய்ய சொன்ன போது நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. ஒரு முறை தண்ணீர் வைத்து பூஜை செய்ய உத்தரவு வந்தது. அதன் பேரில் பூஜை செய்த போது தண்ணீரால் பேரிழப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மண்சரிவு... நெஞ்சை பதற வைக்கிறது - தவெக தலைவர் விஜய் வேதனை!

திருவண்ணாமலை மண்சரிவு... நெஞ்சை பதற வைக்கிறது - தவெக தலைவர் விஜய் வேதனை!

 நிலச்சரிவு.. 

இது போல் பக்தர்கள் கனவில் வரும் பொருட்களைவ வைக்கலாமா என்பதை பூசாரிகள் வெள்ளைப்பூ, சிகப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர், அதில் வெள்ளைப் பூ வந்தால் உடனே மாற்றுவார்கள். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி புடவை வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது.

திருவண்ணாமலை நிலச்சரிவு.. முன்கூட்டியே எச்சரித்த சிவன்மலை ஆண்டவர்- உணர்த்தியது எப்படி? | Sivanmalai Andavar Warns Tiruvannamalai Land Slide

அப்போது கரூர் மாவட்டம் சின்னாண்டகோயிலை சேர்ந்த தணிகைநாதனின் (33) கனவில் மண் விளக்கு வைத்து பூஜை செய்ய உத்தரவு வந்தது. அதன்படி கடந்த நவம்பர் 12 ஆம் தேதி முதல் மண் விளக்கு வைத்து பூஜை செய்யப்பட்டது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வு முன்னேறும்.

அவர்களுடைய தொழில் விருத்தியாகும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் வேறு ஒரு விஷயமும் சொல்லப்படுகிறது. அதாவது அண்மையில் பெஞ்சல் புயலால் திருவண்ணாமலையில் மலைச்சரிவு ஏற்பட்டது.

இதில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் மண்ணுக்குள் புதைந்து சடலமாக மீட்கப்பட்ட துயர சம்பவம் நடந்தது. இதனை கடந்த நாட்களுக்கு முன்னரே சிவன் உணர்த்திவிட்டதாகவும் அதற்கு சாட்சியாகத்தான் மண் விளக்கை சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கச் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.