மடத்தில் 2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவனடியார் - கோவிலில் நிகழ்ந்த மோசச்செயல்!
கோவில் மடத்தில் சிவனடியார் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே பாசார் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலுக்கு ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். இந்த கோவிலில் சிவனடியாராக 31 வயதான சிவபாலன் என்பவர் உள்ளார், இவருடன் சேர்ந்து 2 சிறுவர்கள் தங்கியுள்ளனர்.
பள்ளியில் பயிலும் இவர்கள் சிவபாலனுடன் மடத்தில் தங்கியுள்ளனர், இவர்களுக்கு அந்த சிவனடியார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
போலீசில் புகார்
இந்நிலையில், அந்த சிவனடியார் யாரிடமும் சொல்ல கூடாது என்று அந்த சிறுவர்களை மிரட்டியள்ளார். இதனால் அந்த சிறுவர்கள் பயந்துபோய் யாரிடமும் சொல்லமால் இருந்துள்ளனர். பின்னர், ஒரு கட்டத்தில் அந்த சிறுவர்கள் பள்ளியில் இருந்த புகார் பெட்டியில் எழுதி போட்டுள்ளனர்.
இதனை பள்ளி நிர்வாகம் போலீசில் புகாரளித்தது. மேலும், சிறுவர்கள் தரப்பிலும் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் சிவபாலன் அத்துமீறியதை உறுதி செய்து அவரை போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.