பட்டினப்பிரவேசத்தில் அரசியல் வேண்டாம்: தருமபுர ஆதீனம்

By Irumporai May 22, 2022 10:38 AM GMT
Report

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான தருமபுர ஆதீன மடத்தில் ஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழா மற்றும் குருமுதல்வர் குருபூஜை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பட்டினப்பிரவேச விழா இன்று இரவு நடைபெறுகிறது.

இந்த பட்டினப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்து பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மீண்டும் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   

இந்த நிலையில் இதனைத் தொடர்ந்து நேற்று இரவு தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஒரு வீடியோ குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இது ஒரு ஆன்மீக நிகழ்வு இதனை அரசியல் ஆக்காமல் கொண்டு செல்வதற்கு, ஆதினம் பாதை வகுத்துள்ளதாகவும், திரளான பக்தர்கள் சிவனடியார்கள் இவ்விழாவில் பங்கேற்க வேண்டுமென்றும் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.