என்ன ஜென்மம்.. ஒரு நடிகையை காதலிக்கிறான் - சூர்யா ஜோதிகா காதல் எதிர்ப்பு குறித்து சிவகுமார்!

Sivakumar Suriya Jyothika Tamil Cinema
By Sumathi Jun 01, 2024 05:30 PM GMT
Report

நடிகர் சிவகுமார் முன்னதாக அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகுமார்

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.

என்ன ஜென்மம்.. ஒரு நடிகையை காதலிக்கிறான் - சூர்யா ஜோதிகா காதல் எதிர்ப்பு குறித்து சிவகுமார்! | Sivakumar Talks About Surya Jyotika Marriage

பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது, இருவருமே படு பிஸியாக நடித்து வருகின்றனர். இதற்கிடையில், சூர்யாவும் ஜோதிகாவும் குழந்தைகள் கல்வி காரணமாக மும்பையில் செட்டிலாகியுள்ளனர்.

இதற்கு சூர்யாவின் பெற்றோருடன் ஜோதிகாவுக்கு சண்டை என்றெல்லாம் வதந்தி பரவியது. மேலும், ஆரம்ப காலகட்டத்தில் இவர்களது காதலுக்கு சூர்யாவின் தந்தை சிவகுமார் எதிர்ப்பு தெரிவித்து, சில ஆண்கள் கழித்து தான் ஒத்துக்கொண்டதாக கூறப்பட்டது.

முகத்தில்கூட முழிக்க பிடிக்கல; மாமியார் வீட்டோடு பிரச்னை - ஜோதிகா குறித்து பிரபலம் பகீர்!

முகத்தில்கூட முழிக்க பிடிக்கல; மாமியார் வீட்டோடு பிரச்னை - ஜோதிகா குறித்து பிரபலம் பகீர்!

சூர்யா-ஜோதிகா

இந்நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள நடிகர் சிவகுமார், நான் ஒரு 100 படங்களில் பல்வேறு ஹீரோயின்களை காதலிப்பது போல நடித்திருக்கிறேன் படங்களில் காதலுக்கு ஆதரவாக காதலை கொண்டாடும் நபராக நடித்திருக்கிறேன்.

என்ன ஜென்மம்.. ஒரு நடிகையை காதலிக்கிறான் - சூர்யா ஜோதிகா காதல் எதிர்ப்பு குறித்து சிவகுமார்! | Sivakumar Talks About Surya Jyotika Marriage

அப்படியெல்லாம் ஒரு 100 நடிகைகளுடன் காதலிப்பது போல் நடித்துவிட்டு கேவலம்.. என்னுடைய மகன் ஒரு நடிகையை காதலிக்கிறான் என்பதற்காக அதனை நான் எதிர்த்தால் நான் என்ன ஜென்மம் இதனை ஊர் உலகம் ஒப்புக் கொள்ளுமா? நான் சூர்யா ஜோதிகா காதலை எல்லாம் எதிர்க்கவில்லை.

நான்காண்டுகள் காதலித்தார்கள் மகிழ்ச்சியாக திருமணம் செய்து வைத்தேன் நான் சூர்யா ஜோதிகா காதலை எதிர்த்தேன் என்பதில் எந்த அர்த்தமும் கிடையாது அதில் உண்மையவும் கிடையாது எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ கவனம் பெற்றுள்ளது.