Thursday, Jul 3, 2025

சால்வை கொடுத்த முதியவர்; வீசி எறிந்த நடிகர் சிவக்குமார் - குவியும் கண்டனம்!

Sivakumar Tamil Cinema Kumbakonam
By Sumathi a year ago
Report

முதியவர் ஒருவர் கொடுத்த சால்வையை சிவக்குமார் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிவக்குமார் 

காரைக்குடியில் மூத்த தலைவர் பழ.கருப்பையாவின் புத்தக வெளியீட்டு விழா நடந்துள்ளது. இதில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார்.

sivakumar

அப்போது, மைக்கில் பேசிக்கொண்டேயிருந்த சிவக்குமார், திடீரென பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு, பழ.கருப்பையா காலில் விழுந்து வணங்கினார். பின் மறுபடியும் பேச்சை தொடங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியின் முடிவில் சிவகுமாருக்கு வயதான முதியவர், சால்வை கொண்டு வந்து கொடுத்தார்.

என் மனைவி மடியில்தான் உயிர் விடனும் - நடிகர் சிவக்குமார் உருக்கம்!

என் மனைவி மடியில்தான் உயிர் விடனும் - நடிகர் சிவக்குமார் உருக்கம்!

குவியும் கண்டனம்

ஆனால், சிவகுமார் சால்வையை பார்த்து கடுப்பாகி அதனை தூக்கி எறியும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரது இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

சால்வை கொடுத்த முதியவர்; வீசி எறிந்த நடிகர் சிவக்குமார் - குவியும் கண்டனம்! | Sivakumar Shows Anger On Fan Video Viral Karaikal

முன்னதாக, மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபி எடுக்க வந்த இளைஞரின் செல்போனை, கோபமடைந்த சிவக்குமார் கீழே தள்ளிவிட்டார். இந்த வீடியோ இணையத்திலும் வேகமாக பரவியதுடன், சிவக்குமார் மீது கடும் கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.