என் மனைவி மடியில்தான் உயிர் விடனும் - நடிகர் சிவக்குமார் உருக்கம்!
Sivakumar
By Sumathi
மனைவி மடியில் உயிர் விட விரும்புவதாக நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவக்குமார்
திருப்பூர், வனாலயத்தில் நடிகர் சிவகுமாரின் ‘திருக்குறள் உரை திரையிடல் நிகழ்வு’ நடைபெற்றது. அதில், வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின்
வரலாற்றை நூறு திருக்குறள்களோடு பொருத்தி அதை காணொளியாக்கி நிகழ்ச்சியில் திரையிட்டனர். அதற்கு முன்னதாக பேசிய சிவக்குமார், “பெண்கள்தான் உலகில் படைப்பு கடவுள். எனது தாய் இறந்து விட்டார்.
உருக்கம்
எனக்கு இரண்டாவது தாய் எனது மனைவி தான். என் மனைவியின் மடியில் என் உயிர் பிரிய விரும்புகிறேன்” என உருக்கமாக பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்லடம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.