Sunday, May 11, 2025

'ஜெய் பீம்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார் நடிகர் சிவக்குமார் - வைரல் புகைப்படம்

cinema
By Nandhini 4 years ago
Report

 ‘ஜெய் பீம்’ படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் சிவக்குமார் பாராட்டியுள்ளார்.

கடந்த 2 ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை தா.செ.ஞானவேல் எழுதி இயக்கி இருக்கிறார். நடிகர் சூர்யா இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மைச் சம்பவத்தையே ‘ஜெய் பீம்’ படமாக எடுத்திருக்கிறார்கள்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைமில் ‘ஜெய் பீம்’ வெளியாகி இந்தியா முழுக்க இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வெளி மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், எம்.எல்.ஏக்களும் படத்தை பாராட்டி வருகிறார்கள். இவ்வளவு வரவேற்பு கிடைத்திருப்பதால் நடிகர் சிவக்குமார் ‘ஜெய் பீம்’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி உள்ளார்.

இயக்குநர் ஞானவேல், நடிகர் மணிகண்டன், நடிகை லிஜோ மோல், வில்லனாக நடித்த நடிகர் தமிழ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்திருக்கிறார்கள். சிவக்குமாருடன் இருக்கும் புகைப்படத்தை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.