இணையத்தில் லீக்கான சிவகார்த்திகேயன் Video; அடுத்த தலைவலி - அதிர்ச்சியில் திரையுலகம்!

Sivakarthikeyan Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Jiyath Dec 08, 2023 04:00 PM GMT
Report

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி இணையத்தில் கசிந்துள்ளது.

இமான்-சிவகார்த்திகேயன் 

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டதாகவும், குழந்தைகள் நலனுக்காக அதை வெளியில் சொல்ல முடியாது என்றும் இசையமைப்பாளர் டி இமான் சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இணையத்தில் லீக்கான சிவகார்த்திகேயன் Video; அடுத்த தலைவலி - அதிர்ச்சியில் திரையுலகம்! | Sivakarthikeyans Movie Scene Leaked On Internet

இதனைய‌டுத்து, தனது முதல் மனைவி மோனிகாவை, இமான் விவாகரத்து செய்ததிற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று இணையவாசிகளும், ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் சிவகார்த்திகேயனை விளாசி வந்தனர்.

இந்த‌ ச‌ர்ச்சைக்கு ம‌த்தியில் உடனடியாக பேட்டியளித்த இமானின் முதல் மனைவி மோனிகா 'சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனிதன், நானும் இமானும் பிரியக்கூடாது என்றுதான் அவர் நினைத்தார்" என்று தெரிவித்தார்.

அவங்களுக்கு ஷகிலா மாதிரி இருக்கும்னு நெனச்சு.. இனி பண்ணவே மாட்டேன் - பப்லு பிரித்விராஜ் பகீர்!

அவங்களுக்கு ஷகிலா மாதிரி இருக்கும்னு நெனச்சு.. இனி பண்ணவே மாட்டேன் - பப்லு பிரித்விராஜ் பகீர்!

இணையத்தில் கசிந்த காட்சி 

தற்போது இந்த சர்ச்சை சற்று ஓய்ந்திருக்கு நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு தலைவலியாக மற்றோரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இணையத்தில் லீக்கான சிவகார்த்திகேயன் Video; அடுத்த தலைவலி - அதிர்ச்சியில் திரையுலகம்! | Sivakarthikeyans Movie Scene Leaked On Internet

அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி இணையத்தில் கசிந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு, குழந்தையுடன் சாய் பல்லவி இடம் பெற்றிருக்கும் அந்த காட்சியை இணையத்தில் இருந்து நீக்கியுள்ளது. படப்பிடிப்பு நடைபெற்றும்போதே படத்தின் காட்சி இணையத்தில் வெளியானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.