குகேஷுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் - என்னனு பாருங்க..
சாம்பியன் குகேஷுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பரிசளித்துள்ளார்.
சாம்பியன் குகேஷ்
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் இந்தியா சார்பில் தமிழக வீரர் டி குகேஷ், சீனாவின் டிங் லிரன் ஆகியோர் களமிறங்கினர்.
மொத்தம் 14 சுற்றுகளில், குகேஷ் மற்றும் டிங் லிரன் இருவரும் தலா 2 வென்றிருந்த நிலையில், மற்ற போட்டிகள் டிராவில் முடிந்தது. இதனால் இருவரும் தலா 6.5 புள்ளிகளைப் பெற்றிருந்தனர். கடைசி போட்டி 14வது சுற்றுப் போட்டியில் குகேஷ் வெற்றி பெற்றார்.
பரிசளித்த சிவா
இந்த தொடரில் இந்த வெற்றிக்குப் பின், குகேஷுக்கு 11.45 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. தமிழக அரசும் குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்தது.
இந்நிலையில் குகேஷை நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்திற்கு வரவைத்து கேக் வெட்டி பாராட்டியுள்ளார். மேலும், விலையுர்ந்த வாட்ச் ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.