விராட் கோலிக்கு விளையாட தடை? இளம் வீரருடன் மோதல் - ஐ.சி.சி நடவடிக்கை!
மோதல் தொடர்பாக கோலி மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்து வருகிறது.
கோலியின் செயல்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
19 வயதான சாம் கோன்ஸ்டாஸ் துவக்க வீரராக களம் இறங்கினார். 2021க்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் பும்ராவின் பந்தில் முதல் சிக்சரை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 10 வது ஓவரின் முடிவில் சாம் கோன்ஸ்டாஸ் நேராக நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது விராட் கோலி வேண்டும் என்றே தான் நடந்து வந்த பாதையை மாற்றி அவரை இடித்ததோடு மட்டுமல்லாமல் அவருடன் வாக்குவாதம் செய்தார். பின், ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் அம்பயர்கள் இடை மறித்து இருவரையும் சமாதானம் செய்தனர்.
விளையாட தடை?
இந்நிலையில் கோலியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் ஆஸி., ரசிகர்கள், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். விதிப்படி, ஒரு வீரர் எதிரணி வீரருடன் உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபடுவது லெவல் 2 குற்றம்.
இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடும் வீரருக்கு 3 முதல் 4 நன்னடத்தை புள்ளிகள் குறைக்கப்படும். ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் அல்லது டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும்.
இல்லையெனில், 50 அல்லது 100 சதவீதம் போட்டி கட்டணம் அபராதம் விதிக்கப்படும். எனவே, கோலிக்கு ஒரு போட்டியில் விளையாட தடையோ அல்லது அபராதமோ விதிக்கப்படலாம் என்று ரசிகர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.