தோனிக்கு வந்துள்ள சட்ட சிக்கல் - அரசு நிலத்தில் சட்டவிரோத பயன்பாடு?
தோனிக்கு வழங்கப்பட்ட நிலம் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் வந்துள்ளது.
தோனி
இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 ஐசிசி கோப்பைகளை வென்று பெருமை தேடி தந்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
தோனி கிரிக்கெட்டில் செய்த சாதனைகளை பாராட்டி, அர்ஜுன் முண்டே தலைமையிலான ஜார்கண்ட் மாநில அரசு ஹர்மூ சாலை பகுதியில் அவருக்கு 10,000 சதுரடியில் நிலம் வழங்கப்பட்டது.
சட்ட சிக்கல்
அரசு வழங்கிய நிலத்தை வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது என்ற விதி உள்ளது. இந்நிலையில் அந்த நிலத்தில் மருத்துவ ஆய்வு மையம் செயல்பட்டு வருவதாக ஜார்கண்ட் மாநில வீட்டு வசதி வாரியத்துக்கு புகார்கள் வந்தது.
இது குறித்து பேசிய ஜார்கண்ட் வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் சஞ்சய் லால் பஸ்வான், குடியிருப்பு மனைகளை வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது சட்ட விரோதமாகும். இது குறித்து புகார் வந்துள்ளதால் விசாரணையை தொடங்கியுள்ளோம். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தோனிக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.