எப்பவும் பயம் இருக்கு இமான் அண்ணா - என்னை மன்னிச்சிருங்க! சிவகார்த்திகேயனின் வீடியோ வைரல் !!

Sivakarthikeyan D Imman
By Karthick Jun 24, 2024 03:52 PM GMT
Report

இசையமைப்பாளர் இமான் - நடிகர் சிவகார்த்திகேயன் இருவருக்கிடையே இருக்கும் விவகாரம் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இமான் - சிவகார்த்திகேயன் பிரச்சனை

தமிழ் திரையில் வேகமாக வளர்ந்து வரும் நாயகராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஆரம்ப காலகட்டத்தில் பெரிய ஹிட் பாடல்களை கொடுத்தவர் என்றால் அது டி.இமான் தான்.

ஒரு புறம் அனிருத் சிட்டி மக்களை கவர உதவ, சிவாவை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தவர் இமான் தான். அதில் மாற்று கருத்தும் இல்லை. அப்படி இருக்கும் நிலையில், ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட பெறும் கசப்பான மோதல் தனியாக சொல்லி தெரியவேண்டியதில்லை.

sivakarthikeyan imman

சிவகார்த்திகேயனின் இமேஜ் மீதே விழுந்த அடி அது. அப்படி ஒரு பிரச்சனை அவருக்கு வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் உண்மை எது என்ன யாருக்குமே தெரியாது.

'பாட்டுக்கு பாட்டு' அப்துல் ஹமீது ஞாபகம் இருக்கா!தற்போதைய பரிதாபமான நிலை தெரியுமா?

'பாட்டுக்கு பாட்டு' அப்துல் ஹமீது ஞாபகம் இருக்கா!தற்போதைய பரிதாபமான நிலை தெரியுமா?

பிரிந்து விட்ட நிலையில் தான் தற்போது இணையத்தில் சிவகார்த்திகேயனின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் இமானிடம் மன்னிப்பு கோருகிறார்.

மன்னிப்பு 

அது பழைய வீடியோ தான். அதில் பேசும் போது, நான் ஒருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் அது இமான் அண்ணாவிடம் தான். கொஞ்சம் படங்களில் பிஸியாக இருந்தேன்.

அவரை பார்த்து பேச முடியாமல் போனது. நாங்கள் குடும்பமாக ஒன்றாக சாப்பிட போவதெல்லாம் இப்போது நடப்பதில்லை. அது இமான் அண்ணாவுக்கு அப்செட் ஆகிருச்சு.

sivakarthikeyan imman

நான் அவரை அண்ணா என்றே கூப்பிடுவேன். அவரும் தம்பி தம்பி'னு தான் கூப்பிடுவார். எந்த ஒரு ஈகோவும் இருக்காது. அதேபோல் அண்ணன் என்ற ஒரு பயம் இருந்துட்டே இருக்கு. இவ்வாறு சிவா அந்த பேட்டியில் கூறினார்.