தளபதி விஜய் இடத்தில் நானா?சிவகார்த்திகேயன் நச் பதில் - வைரல்!

Sivakarthikeyan Vijay Tamil Actors
By Vidhya Senthil Oct 26, 2024 06:10 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

விரைவில் வெளியாக உள்ளா அமரன் பட ப்ரோமோஷன் பணிகளில் நடிகர் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் 

சின்னதிரை தொகுப்பாளராகத் தொடங்கி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருக்கேன் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் கோமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த காட்சிகள் திரையரங்குகளில் விசில் பறக்கச் செய்தது.

sivakarthikeyan

அதுமட்டுமில்லாது விஜய் அரசியலில் ஈடுபட உள்ளார். இந்த நிலையில் தளபதி விஜயின் இடத்திற்கு சிவகார்த்திகேயன் பிடிக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் பேச்சு பரவியது. இதற்கு சிவகார்த்திகேயன் தரப்பில் எந்தவித பதிலும் வராமல் இருந்தது. இந்த சுழலில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அழகா இல்லைனு தோணும்; என் கிட்ட யாருமே பேச மாட்டாங்க - மனம் திறந்த சாய் பல்லவி

அழகா இல்லைனு தோணும்; என் கிட்ட யாருமே பேச மாட்டாங்க - மனம் திறந்த சாய் பல்லவி

இந்த படம் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் படம் குறித்துப் பேசினார்.

நடிகர் விஜய் 

இந்த படத்திற்காக ராணுவத்தில் பயன்படுத்தப்படும் உண்மையான துப்பாக்கிகளைப் பயன்படுத்தினோம். சினிமாவில் பயன்படுத்தும் துப்பாக்கிகளை விட அந்த துப்பாக்கிகளைக் கையாண்டது சுலபமாக இருந்தது.இந்த படத்திற்கு 80 கிலோ வரை எடையைக் கூட்டிக் குறைத்தேன் என்று கூறினார்.

amaran movie

அப்போது நடிகர் விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிக்கப்போவதாகப் பலர் கூறுகின்றனர் என்ற செய்தியாளரின் கேள்விக்கு,’’ சினிமாவில் சாதித்த ஒவ்வொருவருக்கும் ஒரு பயணம் உண்டு, அவர்கள் அந்த இடத்தை பிடிப்பதற்கு தங்களை எவ்வாறு மாற்றிக்கொண்டார்கள் என்பதை நாம் பார்க்கவேண்டும் என்று கூறினார்.

மேலும் சினிமா பின்புலத்திலிருந்து வந்தாலும் கூட தன்னை மாற்றிக்கொண்ட அவரது பயணத்தையும், அவரது இடத்தையும் யாராலையும் நிரப்ப முடியாது. சினிமாவை விட்டுவிட்டு அவர் வேறொரு பொறுப்பிற்கு அவர் சென்றாலும், அவரது இடம் அப்படியேதான் இருக்கும்" என்று பதிலளித்தார்.