ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்யும் அபிஷேக் பச்சன்? பூதாகரமான விவகாரம்!
ஐஸ்வர்யா ராயும், அவரது கணவர் அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவி வருகிறது.
ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன்
இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். குழந்தை பிறந்த பின்னர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார். மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
விவாகரத்து?
இதற்கிடையில், கடந்த சில மாதங்களாகவே அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யார் ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் அவர்கள் விவாகரத்து பெறவிருக்கிறார்கள் என்றும் வதந்திகள் தொடர்ந்து பரவிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில் SIIMA Awards விருது நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய்க்கு விருது அளித்தபோது அதில் அபிஷேக் பச்சன் கலந்து கொள்ளவில்லை. ஐஸ்வர்யா ராயின் குடும்பத்தில் ஒருவருக்கு பிறந்தநாள் விழா நடந்துள்ளது.
இதில் ஐஸ்வர்யா ராயும், அவரது மகள் ஆராத்யாவும் கலந்து கொண்டனர். ஆனால் அபிஷேக் பச்சன் கலந்து கொள்ளவில்லை. இருவரும் ஒன்றாக செல்லாமல் தனித்தனியாக சென்று வருவது இந்த விவாகரத்து விவகாரத்தை மேலும் பூதாகரமாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.