சென்னை வெள்ளம்: நிவாரண பணிகளுக்கு 'நடிகர் சிவகார்த்திகேயன்' நிதியுதவி!

Sivakarthikeyan Tamil nadu Chennai Michaung Cyclone
By Jiyath Dec 11, 2023 03:18 AM GMT
Report

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சார்பாக ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.

சென்னை வெள்ளம் 

மிக்ஜாம் புயலால் கடந்த வாரம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் தலைநகர் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

சென்னை வெள்ளம்: நிவாரண பணிகளுக்கு

குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த நிதியை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன், தனது சார்பாக ரூ.10 லட்சம் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

சென்னை புயல் நிவாரணம் ரூ.6,000: டோக்கன் எப்போது..? - அமைச்சர் உதயநிதி புதிய தகவல் !

சென்னை புயல் நிவாரணம் ரூ.6,000: டோக்கன் எப்போது..? - அமைச்சர் உதயநிதி புதிய தகவல் !

நடிகர் சிவகார்த்திகேயன் 

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "மிக்ஜாம் புயல் - கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது.

சென்னை வெள்ளம்: நிவாரண பணிகளுக்கு

நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள், இயக்கங்கள், தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நம்மை சந்தித்த போது, நடிகர், சகோதரர் சிவகார்த்திகேயன், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் - நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம். இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்” என தெரிவித்துள்ளார்.