சர்ச்சை பேச்சு பிரபலம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் இணைந்தார்..!
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் கட்சியில் இணைந்தார்
விமர்சனம்
ஒரு கட்சியினரை குறித்து மற்றொரு கட்சியினர் விமர்சனம் செய்வது சகஜம் என்றாலும், தமிழக அரசியலில் மற்றொருவரை தரைகுறைவாக விமர்சிக்கும் வழக்கம் பெரும்பாலும் இருந்ததில்லை.
குறிப்பாக, பொதுவெளியில் தரைகுறைவாக பேசும் பழக்கத்தை கொண்டிருப்பதில்லை. ஆனால், அவ்வாறு மோடி, செல்லூர் ராஜு போன்றோர்களை மிகவும் தரைகுறைவாக மேடையில் பேசி சர்ச்சையானவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
மீண்டும் திமுகவில்
அவர் பேசி வீடியோக்கள் வெளியாகி பிரபலமான நிலையில், கடுமையான விமர்சனங்களை அவரும் திமுக கட்சியும் எதிர்கொண்டது. இதன் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
ஆனால், தற்போது அவர் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழக பணியாற்றிட கோரிக்கை விடுத்திருந்தார் இதனை ஏற்று அவர் மீததான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.