Friday, Jul 11, 2025

தமிழ்நாடு ஆளுநர் குறித்து அவதுாறு பேச்சு - திமுக பேச்சாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

DMK R. N. Ravi Governor of Tamil Nadu
By Thahir 2 years ago
Report

தமிழ்நாடு ஆளுநர் குறித்து அவதுாறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநரின் செயலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவதுாறாக பேசிய திமுக பேச்சாளர் 

திமுக பேச்சாளர் ஆனா சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழநாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியும், அவரை விமர்சனம் செய்தும் பேசியிருந்தார்.

தற்போது அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு ஆளுநர் குறித்து அவதுாறு பேச்சு - திமுக பேச்சாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு | Court Case Against Dmk Speaker

இதை தொடர்ந்து பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அவதுாறு வழக்கு தாக்கல் 

மேலும், இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல்துறை நடவடிக்கை ஏதும் எடுக்காமல், நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், ஆளுநரை அவதூறாக விமர்சித்ததாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு தாக்கல் போடப்பட்டுள்ளது.

மேலும், ஆளுநரின் செயலாளர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.