பிரபல பாடகரின் மகனுடன் காதலில் விழுந்த சிவாங்கி? இணையத்தை கலக்கும் வீடியோ

Sumathi
in பிரபலங்கள்Report this article
வித்யாசாகர் மகனுடன் சிவாங்கி நெருக்கம் காட்டியிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சிவாங்கி
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. அதன் பின்னர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்.
தொடர்ந்து, அதே நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று அசத்தினார். அந்த நிகழ்ச்சி மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்துவிட்டார். மேலும் தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
வைரல் வீடியோ
தனது சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கும். அந்த வகையில் தற்போது. வித்யாசாகரின் மகனான ஹர்ஷவர்தனுடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடல் செய்து இருந்தார்.
அப்போது இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். அந்த நட்பு காதலாக மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் இருவரும் இணைந்து ஆல்பம் பாடல் செய்துள்ளனர். அதில் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.