நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த குக் வித் கோமாளி சிவாங்கி - டான் படக்குழுவினரின் அட்ராசிட்டீஸ்!

sivakarthikeyan actors don movie group photo viral
By Anupriyamkumaresan Aug 09, 2021 06:40 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

நடிகர் சிவகார்த்திக்கேயனுடன் சிவாங்கி உட்பட டான் படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த குக் வித் கோமாளி சிவாங்கி - டான் படக்குழுவினரின் அட்ராசிட்டீஸ்! | Don Movie Actors Photo Viral Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தற்போது அட்லீயிடம் இணை இயக்குனராக இருந்த சிபி சக்ரவர்த்தி என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் 'டான்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.

சூரி, சிவாங்கி, காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்டோரும் அப்படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் டான் படத்திற்கு இசையமைக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த குக் வித் கோமாளி சிவாங்கி - டான் படக்குழுவினரின் அட்ராசிட்டீஸ்! | Don Movie Actors Photo Viral Sivakarthikeyan

சிவகார்த்திகேயனின் SK Productions நிறுவனம் படத்தைத் தயாரிக்கின்றனர். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் வெளியிட உள்ளனர். டான் திரைப்படம் கல்லூரி கதைக்களத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

படக்குழுவினர் தற்போது பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் சிவாங்கி, ப்ரியங்கா அருள், பாலா சரவணன், ஆர்ஜே விஜய் உள்ளிட்ட டான் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த குக் வித் கோமாளி சிவாங்கி - டான் படக்குழுவினரின் அட்ராசிட்டீஸ்! | Don Movie Actors Photo Viral Sivakarthikeyan

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தட்டி செல்கின்றனர்.